நவாஸ் ஷெரிப்பை ஏலம் விட்ட இணையதள நிறுவனம். பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு

நவாஸ் ஷெரிப்பை ஏலம் விட்ட இணையதள நிறுவனம். பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு
nawaz sharif
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பை உபயோகமற்ற பொருள் என சித்தரித்து ஆன்லைனில் விற்பதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியூள்ளது.

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பனாமா ஆவணங்கள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் விட்டு வைக்கவில்லை. இவரது  இரண்டு மகன்கள், மற்றும் மகள் மரியம் ஆகியோர்களின் பெயர்களில் வெளிநாடுகளில் கம்பெனி நடத்துவதாக பனாமா ஆவணங்கள் மூலம் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப் போவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்லைன் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த விளம்பரத்தில் “உபயோகமற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் விற்பனைக்கு என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரிப் என்ற பொருள் இனிமேல் பணி செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் இனிமேலும் பணியாற்றாது என்றும் அது பிறவியிலேயே ஊழல் நிறைந்தது என்றும்  இதன் குடும்பமே கோளாறு மற்றும் ஊழல் நிறைந்தது என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நோயை எடுத்து சென்று அகற்றி விடுங்கள். இவருடன் அவரது தம்பி ஷாபாஷ் செரீப்பையும் தூக்கி எறிந்துவிடுங்கள். அவரை இலவசமாக தருகிறோம்” என கூறப்பட்டிருந்தது. ஷாபாஷ் தற்போது பஞ்சாப் மாகாண கவர்னராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏலம் நேற்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது பரபரப்பான சிறிது நேரத்தில் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது.

Leave a Reply