‘பனாமா ஆவணங்கள் எதிரொலி. ஐஸ்லாந்து பிரதமரை அடுத்து ஸ்பெயின் தொழில்துறை அமைச்சர் ராஜினாமா

‘பனாமா ஆவணங்கள் எதிரொலி. ஐஸ்லாந்து பிரதமரை அடுத்து ஸ்பெயின் தொழில்துறை அமைச்சர் ராஜினாமா

spainசமீபத்தில் வெளியான ‘பனாமா ஆவணங்கள்’ உலகின் பல நாடுகளின் தலைவர்களை நிலைகுலைய செய்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் முதல் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப் வரை பல்வேறு நாட்டு தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை பனாமா நாட்டில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்ததாக ‘பனாமா ஆவணங்கள்’ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி பல நாட்டு தலைவர்களின் பதவிகளுக்கு வேட்டு வைக்கும் நிலையை ஏற்படுத்தியது.

உலக நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பனாமா ஆவணங்களின் மெகா பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவணங்கள் வெளிவந்ததும் ஐஸ்லாந்து அதிபரின் பதவி பறிபோனது. இந்நிலையில் தற்போது இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த ஸ்பெயின் நாட்டின் தொழில்துறை மந்திரி ஜோஸ் மானுவேல் சொரியா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்துக்கு சொந்தமான ஜெர்சி தீவில் தனது சகோதரரின் தொழிலில் முதலீடு செய்ததன்மூலம் ஏராளமாக பணம் பதுக்கி வைத்திருந்ததாக இவர் மீது பனாமா ஆவணங்கள் குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டை ஜோஸ் மானுவேல் சொரியா மறுத்தபோதிலும், அந்நாட்டில் அவருக்கு எதிராக கிளம்பிய போராட்டம் காரணமாக வேறு வழியின்றி நேற்று ராஜினாமா செய்தார்.

ஐஸ்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் மற்றும் தற்போதைய பிரதமர்கள், உக்ரைன் ஜனாதிபதி, சவுதி அரேபியா மன்னர் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளர்கள், அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், இந்திய நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் பல நாடுகளின் அமைச்சர்கள் என நூற்றுக்கணக்கான பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply