மது குடித்தால்தான் மதிபெண்கள். கண்டிஷன் போட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்
அதிகமாக மது குடிக்கும் மாணவருக்கே அதிக மதிப்பெண், மது குடிக்காதவர்களுக்கு ஜீரோ மதிப்பெண் என விநோதமான போட்டி வைத்த சீன ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள குய்ழோ என்ற மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் சீன வைத்திய முறைகளை கற்றுத்தரும் கல்லூரியாக இயங்கி வருகிறது. பாரம்பரியமான மருந்து வகைகளை தயாரிக்கும் முறை குறித்த பரிட்சை ஒன்று இந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த பரிட்சை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் இங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் விநோதமான கண்டிஷன் ஒன்றை வைத்துள்ளார்.
ஒருகிளாஸ் மதுவை ஒரே மூச்சில் குடிக்கும் மாணவருக்கு 100 மதிப்பெண்கள் என்றும் அரைகிளாஸ் மட்டுமே குடிக்கும் மாணவர்களுக்கு 90 மதிப்பெண்கள், ஓரளவு குடித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு 60 மதிப்பெண்கள் என்றும் சுத்தமாக குடிக்காதவர்களுக்கு ‘பூஜ்ஜியம்’ மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அறிவித்தார். 100 மத்னிப்பெண்களை பெற போட்டிப் போட்டுக் கொண்டு மது குடித்த பல மாணவர்கள் வகுப்பறைக்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளதால் அந்த கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதுதொடர்பான தகவல் வெளியானதும் அந்த ஆசிரியர் தற்காலிக பணீநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பரவ ஆரம்பித்ததும் அவரது செயலுக்கு நியாயம் கற்பித்து சிலரும், எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.