பாமக தோற்கடிக்க கூட்டணி சேர்ந்த அதிமுக-திமுக-தேமுதிக.

பாமக தோற்கடிக்க கூட்டணி சேர்ந்த அதிமுக-திமுக-தேமுதிக.

dr.ramdossஜெயலலிதாவுக்கும் எனக்கும்தான் முக்கிய போட்டி என ஒவ்வொரு பிரச்சார மேடைகளிலும் முழங்கி வரும் அன்புமணிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பாமக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாமக முதல்வர் வேட்பாளரை ஒரு வருடத்திற்கு முன்பே அறிவித்தது அவர்களுடைய தன்னம்பிக்கையாக இருந்தாலும், இந்த தேர்தலில் பாமக பலத்த அடி வாங்கும் என்றும் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் பாமகவை அழிக்க கங்கணம் கட்டி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாமக வலுவாக இருக்கும் பகுதிகளில் அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளுமே வலுவான அதே நேரத்தில் வன்னியர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாமகவின் பரம விரோதி என்று கூறப்படும் தேமுதிகவும் தர்மபுரி, சிதம்பரம் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து பாமகவை தோற்கடிக்க முடிவு செய்துள்ளது. எனவே இந்த தேர்தலோடு பாமக கட்சி கரைந்துவிடும் என்றும் அனேகமாக இந்த தேர்தலில் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply