கச்சா எண்ணெய் விலை தொடர் வீழ்ச்சி. தடுத்து நிறுத்த எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அவசர ஆலோசனை
கச்சா எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. உற்பத்தி விலையை விட குறைவான விலைக்கு கச்சா எண்ணெயின் விலை சமீபத்தில் வீழ்ச்சி அடைந்ததால் விலை வீழ்ச்சியை நிறுத்துவது குறித்து பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளனர். முதல்கட்டமாக உற்பத்தியை குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைவதை தடுக்க உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 15 முக்கிய நாடுகளின் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி அலி அல் நைமி, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளின் பெட்ரோலியத்துறை மந்திரிகள் தோஹா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரான் கையொப்பமிடாது என செய்திகள் வெளிவந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 32 லட்சம் பேரல் கச்சா எண்ணையை உற்பத்தி செய்துவரும் ஈரான் முதலில் சர்வதேச பொருளாதாரத்தடை முழுமையாக விலக்கப்பட்டு, தங்கள் நாட்டு கச்சா எண்ணையை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.