கல்லூரி தகவல்களுக்காக ஒரு செயலி

கல்லூரி தகவல்களுக்காக ஒரு செயலி

appsபள்ளிப் படிப்பை முடித்ததும் அமெரிக்காவில் உயர் கல்வி பெற விரும்புகிறவர்கள் அங்குள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங்களைச் சரியாகத் தெரிந்து கொள்ள விரும்பலாம். இதற்காக இணையத்தில் தேடிப்பார்த்து தனித்தனியே தகவல்களைத் தேர்வு செய்வது ஒரு வழி. மாறாக ஒரே இடத்தில் தகவல்களைப் பெற விரும்பினால் ‘ஸ்கூல்டு’ செயலி அதற்கு உதவியாக இருக்கும்.

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் செயல்படும் இந்தச் செயலி, அமெரிக்காவில் உள்ள முன்னணிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. அனுமதி வாய்ப்பு குறித்த விவரங்களையும் அறியலாம். கல்லூரிகளில் வழங்கப்படும் பாடத் திட்டங்கள் பற்றிய தகவல்களோடு கல்லூரிப் படிப்பை முடித்தால் கிடைக்கக் கூடிய ஊதியம் உள்ளிட்ட தகவல்களையும் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://www.schoold.co/

Leave a Reply