மணிரத்னம் படத்தின் நாயகி சத்தியமா இவர்தாங்க…
‘ஓகே கண்மணி’ படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகி என சுமார் 10 பேர்கள் அறிவிக்கப்பட்டு பின்னர் அதில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக இதில் சிக்கியவர் ‘பிரேமம்’ புகழ் சாய்பல்லவி.
மணிரத்னம் படத்தின் நாயகி சாய்பல்லவியும் இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஆதித்தி ஹையதாரி’ (Aditi Hyadari) என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்தான் கார்த்தி ஜோடியாக நடிப்பவர் என்றும் இனிமேல் ஹீரோயின் விஷயத்தில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றும் மணிரத்னம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘குருதிப்பூக்கள்’ என்று நேற்று வெளிவந்த செய்தி படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றும் டைட்டிலை மணிரத்னம் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.