முதுகலை டிப்ளமோ படிப்புக்கு எல்.பி.எஸ்.ஐ.எம் அழைப்பு
புது தில்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனத்தில் 15 மாத எக்ஸிக்யூடிவ் முதுகலை டிப்ளமோ மேலாண்மை படிப்புக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2016-17 கல்வியாண்டில் பிசினஸ் அனலிடிக்ஸ், பேமிலி மேனேஜ்டு பிசினஸ் அன்ட் ஜென்ரல் மேன்ஜ்மென்ட் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதோடு, 5 வருட பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.1950 ஆன்லைனில் செலுத்தலாம். தபால் மூலம் அனுப்ப ரூ.2,025 வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
CAT/GMAT நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண், எழுத்துத்தேர்வு, குழுகலந்துரையாடல், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஏப்ரல் 30 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.