தூதுவளைப் பூ பாயசம்
என்னென்ன தேவை?
தூதுவளைப் பூ அரை கப்
பசும் பால் ஒரு கப்
துருவிய வெல்லம் அரை கப்
கசகசா கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் 3 டீஸ்பூன்
முந்திரி – 6
திராட்சை, ஏலக்காய் சிறிதளவு
நெய் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
கசகசா, தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பை ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங் கள். திராட்சை, ஏலக்காயை நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள். தூதுவளைப் பூவைக் கழுவி நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். வெந்ததும் பாலைச் சேர்த்து, கொதித்தவுடன் துருவி வைத்துள்ள வெல்லத்தைச் சேர்த்துக் கிளறுங்கள். பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய்த் துருவல் கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, ஏலக்காய் திராட்சை சேர்த்து இறக்கிவையுங்கள். விரும்பினால் குங்குமப் பூவைத் தூவலாம். தாது விருத்தி உண்டாகும், உடல் வலுப் பெறும்.
– ராஜபுஷ்பா