ஐ.பி.எல் கிரிக்கெட்: கொல்கத்தா, குஜராத் வெற்றி. தோனி அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய இரண்டு போட்டிகளில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி சதமடித்தார்.
181 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இருப்பினும் விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள தோனி தலைமையிலான புனே அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த நிலைக்கு செல்வது கடினம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.