உத்தரகாண்ட் விவகாரத்தால் ஸ்தம்பித்தது மாநிலங்களவை.
சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஆட்சியை ரத்து உத்தரகாண்ட் மாநில ஐகோர்ட்டு ரத்து செய்து அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்த தீர்ப்பு மத்திய அரசை தர்மசங்கப்படுத்திய நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. எதிர்பார்த்ததை போலவே உத்தரகாண்ட் விவகாரம் மாநிலங்களவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனையை மாநிலங்களைவையில் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஆளும் பாரதிய ஜனதா அரசு எதிர்க்கட்சிகளை வேண்டுமென்றே தூண்டுவதாக குற்றம் சாட்டினார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகவும் 356-வது பிரிவை அரசு தவறாக பயன்படுத்தவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘உத்தரகாண்ட் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து விவாதிக்க முடியாது’ என கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பெரும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழுக்கங்களை எழுப்பி வந்ததால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.