சீனாவின் கடும் எதிர்ப்பால் உய்குர் தலைவர் துல்குன் இசாவின் விசாவை ரத்து செய்தது இந்தியா.

சீனாவின் கடும் எதிர்ப்பால் உய்குர் தலைவர் துல்குன் இசாவின் விசாவை ரத்து செய்தது இந்தியா.
dolkun
சீனாவில் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட சர்வதேச உய்குர் கூட்டமைப்பு  தலைவர் துல்குன் இசாவுக்கு இந்தியா விசா வழங்கி பின்னர் சீனாவின் கடும் எதிர்ப்பு காரணமாகஅந்த விசாவை ரத்து செய்துவிட்டது.

திபெத் பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா உள்பட பலர் பங்குபெறும் சர்வதேச ஜனநாயக மாநாடு தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனியில் உள்ள துல்குன் இசா இந்திய அரசிடம் விசா கோரி விண்ணப்பித்தார். இவருடைய விசாவை பரிசீலனை செய்த வெளியுறவு அமைச்சகம் அவருக்கு விசா வழங்கியது.

ஆனால்  துல்குன் இசா சீன அரசுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தததால் அவருக்கு எதிராக சீனா சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளது என்றும் அவர் இந்தியா வர விசா கொடுத்தது விவாதத்திற்கு உரியது என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இசாவுக்கு வழங்கியிருந்த விசாவை இந்திய அரசு ரத்து செய்துவிட்டது.

இதுகுறித்து இசா அளித்து உள்ள பேட்டியில் ”உண்மையாகவே இந்தியாவிற்கு வர மிகவும் விரும்பினேன். கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி விடுக்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டது என்ற செய்தி தாங்கிய இ-மெயில் சனிக்கிழமை வந்தது. விசா ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை என்னிடம் தெரிவிக்க தொடர்பு கொள்ளவில்லை. இது எங்களுக்கு மிகவும் துன்பம் நிறைந்த சூழ்நிலையாகும்,” என்று கூறியுள்ளார்.

Leave a Reply