மலேசியா: இந்து கோவிலின் சிலைகளை சேதப்படுத்தியது ஐ.எஸ்.தீவிரவாதியா? பெரும் பரபரப்பு

மலேசியா: இந்து கோவிலின் சிலைகளை சேதப்படுத்தியது ஐ.எஸ்.தீவிரவாதியா? பெரும் பரபரப்பு

hinduமலேசியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அம்மன் கோவில் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பேராக் என்ற மாநில தலைநகர் இபோ என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் கோவிலில் சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியுள்ளார். நவக்கிரக சிலைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன

பின்னர் அந்த நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்று பஸ் நிலையம் மீது மோத செய்துவிட்டு தப்பியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சோங் ரம்புத்தான் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்ரனர். இச்சம்பவம் மலேசிய தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் அப்பகுதி பதட்டம் நிறைந்ததாக காணப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும்,

கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதாகவும், அவர் மனநல சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து மலேசிய இந்துக்களின் கூட்டமைப்பான ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கூறும்போது, ‘கோவில் சிலைகளை உடைத்த நபர் ஓட்டி வந்த காரில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பேனரும் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் செயலாகத் தெரியவில்லை. ஐ.எஸ். அமைப்பின் சதித்திட்டமாகத் தெரியும் இந்தச் சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply