கமல் படத்தின் அழைப்பிதழ் இதுதான்.

கமல் படத்தின் அழைப்பிதழ் இதுதான்.
kamal
உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் அழைப்பிதழ் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் வரும் 29ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாக கமலின் அடுத்த படத்தின் தொடக்கவிழா பிரமாண்டமாகவும் அதே நேரத்தில் இந்த விழா யூடியூபில் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட உள்ளது.

கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தில் தற்போது புதியதாக பிரபல காமெடி நடிகர் பிரமானந்தம் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

கமல்ஹாசன் கதை-திரைக்கதை எழுதும் இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார். ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply