இந்த ஆண்டிலேயே மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம். சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

இந்த ஆண்டிலேயே மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம். சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

entranceமருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஒருசில மாணவர்கள் உற்சாகம் அடைந்தும் பல மாணவர்கள் அதிருப்தியும் அடைந்துள்ளதாக தெரிகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் தனித்தனியாக நுழைவுத் தேர்வை நடத்தி வந்த நிலையில் இந்த முறையை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (என்இஇடி) என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு தனியார் கல்லூரிகள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்களை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய அரசு ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்தன. இந்த முறையீட்டு மனுவை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை அண்மையில் விலக்கியது.

இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதற்கான தேதி இன்று முடிவு செய்யப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

Leave a Reply