ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றி

ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றி

Delhi Daredevils batsman Chris Morris celebrates scoring a half-century (50 runs) during the 2016 Indian Premier League (IPL) Twenty20 (T20) cricket match between Delhi Daredevils and Gujarat Lions at The Feroz Shah Kotla Stadium in New Delhi  on April 27, 2016. / AFP PHOTO / SAJJAD HUSSAIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்ததால் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மித் 53 ரன்களும், மெக்கல்லம் 60 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்ததால் குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் குவித்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணி, தொடக்கத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும் மோரீஸ், டுமினி ஆகியோர்களின் அதிரடியால் இலக்கை நெருங்கியது. 17வது ஓவரில் மோரீஸ் மூன்று சிக்ஸர்கள் அடித்ததால் டெல்லி வெற்றி பெற்றுவிடும் நிலையில் இருந்தது. ஆனால் 19வது ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடைசி ஓவரில் வெற்றி பெற 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் டெல்லி அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 20வது ஓவரை மிக அருமையாக பிராவோ வீச் குஜராத் வெற்றியை உறுதி செய்தார்.

Leave a Reply