பகலில் சமையல் செய்தால் 2 ஆண்டுகள் ஜெயில். பீகார் அரசு பிறப்பித்த விநோத உத்தரவு

பகலில் சமையல் செய்தால் 2 ஆண்டுகள் ஜெயில். பீகார் அரசு பிறப்பித்த விநோத உத்தரவு

biharதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மிக அதிகமாக அடித்து வரும் நிலையில் வட மாநிலங்களிலும் மிக அதிகமான வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெயில் அடிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதனால் அனல் காற்று வீசுவதோடு அடிக்கடி தீ விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே அடிக்கடி நிகழும் தீவிபத்தை தவிர்க்க பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டில் யாரும் சமைக்க கூடாது என்றும் கோயில் மற்றும் எந்த வழிபாட்டுக்காகவும், யாகங்கள் நடத்துவதையும் இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தின் பெகுசாரி மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 குடிசைகள் நாசமாகின. இந்த தீவிபத்து சமையல் செய்தபோது நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்துதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பீகார் போலவே ஒடிசா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயல்பைக்காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளபோதிலும் இதுபோன்ற விநோதமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply