விஜயகாந்துக்கு கோடிக்கணக்கில் கடனா? ஆச்சரியப்பட வைக்கும் சொத்து பட்டியல்

விஜயகாந்துக்கு கோடிக்கணக்கில் கடனா? ஆச்சரியப்பட வைக்கும் சொத்து பட்டியல்

vijayakanthதேமுதிக தலைவர் விஜயகாந்த் வேட்புமனு தாக்கல் செய்தபோது உறுதிமொழி எடுக்க தேர்தல் அதிகாரியுடன் வாதம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்துப்பட்டியலில் தனக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்து 34 ஆயிரத்து 38 கடன் இருப்பதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

100 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்த, ஆண்டாள் அழகர் கல்லூரியின் உரிமையாளராக உள்ள விஜயகாந்துக்கு கோடிக்கணக்கில் கடனா? இது நம்பும்படியாகவா இருக்கின்றது என டுவிட்டரில் பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் விஜயகாந்த் தனது பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 60 லட்சத்து 16 ஆயிரத்து 721 என்றும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.19 கோடியே 37 லட்சத்து 75 ஆயிரத்து 500 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி பிரேமலதா பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.4 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 893 என்றும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.17 கோடியே 42 லட்சத்து 76 ஆயிரத்து 600 என்றும், தங்கம் 1,410 கிராம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply