பொருளாதாரம், சட்டம் பயின்றவர்களுக்கு எக்சிம் வங்கியில் பணி
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் (எக்ஸிம் வங்கி) நிரப்பப்பட உள்ள அதிகாரி பயிற்சி பணியிடங்களுக்கு பொருளாதாரம் மற்றும் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer Trainees
காலியிடங்கள்: 09
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.32,500 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager-HRM, Export-Import Bank-of India,
Centre One Building, Floor 21,
World Trade Centre Complex,
Cuffe Parade, Mumbai – 400005.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.eximbankindia.in/sites/default/files/ad-english-2016.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.