முன்னறிவிப்பின்றி ஈராக்கிற்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர்

முன்னறிவிப்பின்றி ஈராக்கிற்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர்

Biden makes surprise trip to Iraqஈராக் நாட்டிற்கு எந்தவித முன்னறிவிப்பு இன்றி அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் நேற்று தனிவிமானம் ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் நகரை வந்தடைந்ததால் ஈராக் தலைவர்கள் மட்டுமின்றி வளைகுடா நாடுகளைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள் ஆச்சரியம் அடநிதுள்லனர்.

ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி அவர்களுடன் ஈராக்கில் நிலவும் அரசியல், பொருளாதாரம் குறித்த நிலவரம் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள், உள்நாட்டு போராளிகளை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனையை ஜோ பிடன் நடத்தியதாக கூறப்படுகிறது

அமெரிக்க ஆலோசனையின்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈராக் மந்திரிசபையை மாற்ற ஹைதர் அல் அபாடி முயற்சி செய்தார். ஆனால் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஈராக்கில் வாழும் ஷியா பிரிவினரின் மூத்த தலைவரான மொக்தாடா அல்-சதர் என்பவர் தலைமையில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இதனால், மந்திரிசபையை மாற்றி அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் திடீரென வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply