இந்தியாவின் ஆதார் அட்டை அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். பிற நாடுகளுக்கு உலக வங்கி பரிந்துரை

இந்தியாவின் ஆதார் அட்டை அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். பிற நாடுகளுக்கு உலக வங்கி பரிந்துரை

Aadhar-Card-400x226இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள அட்டையாக ஆதார் அட்டை என்னும் அடையாள அட்டையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கி வருகின்றன. இந்த அடையாள அட்டை கிட்டத்தட்ட 90% கொடுத்து முடித்துவிட்ட நிலையில் தற்போது இந்த முயற்சிக்கு உலக வங்கியிடம் இருந்து பாராட்டு கிடைத்துள்ளதால இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை இயக்குநர் அஜய் பூஷண் பாண்டே நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு உலக வங்கி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அடையாள அட்டை திட்டத்தை உருவாக்குவதில், இந்தியாவின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இதர நாடுகளுக்கு பரிந்துரைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்’ என்று அஜய் பூஷண் பாண்டே கூறியுள்ளார்.

முன்னதாக ஆதார் அடையாள அட்டை திட்டம் குறித்து, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளிடம் அஜய் பாண்டே விளக்கினார். ஒரு ஆதார் அட்டை வழங்க ஆகும் செலவு, ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவானதாகும்; நேரடி மானியத் திட்டங்களை திறம்படச் செயல்படுத்துவதற்கு, ஆதார் அடையாள எண் பயன்படுகிறது; இதன் மூலம் அரசுக்கு ஏராளமான பணம் மிச்சமாகிறது என்பன போன்ற முக்கிய அம்சங்களை அஜய் பாண்டே எடுத்துரைத்தார்.

இதனிடையே, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் (ஏபிஇசி) இணைய இந்தியா விருப்பம் தெரிவித்ததை, அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஆன்டனி பிளிங்டன் கூறும்போது, “ஏசிஇசி-யில் இணைவதற்கான இந்தியாவின் விருப்பத்தை வரவேற்கிறோம். இதுகுறித்து இந்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று கூறினார்.

Leave a Reply