டொனால்ட் டிரம்ப் பொதுக்கூட்டத்தில் பயங்கர வன்முறை. 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

டொனால்ட் டிரம்ப் பொதுக்கூட்டத்தில் பயங்கர வன்முறை. 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

donaldஅமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவருக்குமிடையே நாளுக்கு நாள் அதிக போட்டி ஏற்பட்டு கொண்டு யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கலிபோர்னியாவின் ஆரஞ்ச் கவுண்டி என்ற பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று தனக்கு ஆதரவு திரட்டினார். அவர் தனது உரையை முடித்தபோது வெளியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையில் சென்ற வாகனங்களை அடித்து நொறுக்கினர். காவல்துறையின் காரை பஞ்சராக்கி சேதமாக்கினர். இதனையடுத்து அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். மேலும், இதுதொடர்பாக 20 பேரை கைது செய்திருப்பதாக கலிபோர்னியா காவல்துறை தெரிவித்துள்ளது.

Chennai Today News: Violence in Donald Truimp meeting

Leave a Reply