ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மகள் சேர திட்டம்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்களான மாலியா மற்றும் ஷாசா ஆகிய இருவரும் வாஷிங்டன் நகரில் உள்ள சைட்வெல் பிரண்ட்ஸ் என்ற தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வரும் நிலையில் தற்போது மூத்த மகளான மாலியாவுக்கு இந்த ஆண்டுடன் பள்ளி படிப்பு முடிகிறது. இதனையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க போவதாக வெள்ளை மாளிகை அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் 2017ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதியுடன் முடிகிறது. ஆனாலும் அவர் 2-வது மகள் ஷாசா பள்ளி முடியும் வரை வாஷிங்டன் நகரிலேயே தங்கப்போவதாக ஒபாமா கூறியுள்ளார். எனவே ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் சேரும் மாலியா விடுதியில் தங்கி படிக்கலாம் என கூறப்படுகிறது.
இதே பல்கலைக்கழகத்தில் உள்ள சட்ட கல்லூரியில் தான் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேலி ஆகியோர் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.