விஜய் 60 படப்பிடிப்பில் கலந்து கொண்ட சதீஷ்
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது.
சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் விஜய்யின் அறிமுகப்பாடல் காட்சியை இயக்குனர் பரதன் படமாக்கினார். பிரமாண்டமாக உருவாகிய இந்த பாடலுக்கு தினேஷ் நடனப்பயிற்சி செய்தார்.
இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பில் காமெடி நடிகர் சதீஷும் கலந்துகொண்டார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் நடித்த சதீஷ் தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதீஷ் தனது டுவிட்டரில் ‘First day shoot with #Ilayathalapathy @actorvijay sir for #Thalapathy60 God and Cinema fans bless us. #MikkaMagizhchi என்று தெரிவித்துள்ளார்.
விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.