சிறையில் இருந்து கொண்டே சாட்டிங் செய்த கைதி. மே.வங்கத்தில் பரபரப்பு

சிறையில் இருந்து கொண்டே சாட்டிங் செய்த கைதி. மே.வங்கத்தில் பரபரப்பு

jailமேற்கு வங்க மாநிலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைது ஒருவர் சிறையில் இருந்தவாறே ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்து கொண்டும், புகைப்படங்களை பதிவு செய்து கொண்டும் இருந்ததாக வந்த தகவலை அடுத்து அவரிடம் சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புர்த்வான் மாவட்ட சீர்திருத்த இல்லத்தில் கைதியாக கடந்த ஒரு ஆண்டாக இருந்து வருபவர்  விஷால் சிங். இவர் கடந்த சில மாதங்களாக சிறையில் இருந்தவாறே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்பட பல புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார். மேலும், சிறையில் இருந்தவாறே ஃபேஸ்புக் சாட்டிங் மூலம் தனது நண்பர்களுடன் அவர் ‘சாட்டிங்’ செய்தும், தனது நட்புவட்டத்தை உயிர்ப்புடன் பராமரித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக்கில் பதிவிடும் வகையில் அவருக்கு மொபைல் அல்லது லேப்டாப் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் உண்மை தெரியவரும் என்றும் சீர்திருத்த இல்லத்தின் சூப்பிரெண்ட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply