அமெரிக்காவின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்றுவோம். ஜப்பான் பிரதமர் உறுதி
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிவடைய உள்ளதை அடுத்து அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? என்ற கேள்வி அமெரிக்கர்களை மட்டுமின்றி உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
அடுத்த அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகளை குறித்தே பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் உறவை தொடர்வது குறித்து பரிசீலிக்கும். இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக யார் பொறுப்பேற்றாலும் அவருடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த ஜப்பான் பிரதமர், ‘அமெரிக்காவுடனான ஜப்பானின் நட்புறவு ஆசியாவில் அமைதியும், வளமையும் நிலைப்பதற்கான அடிப்படையிலானது. எனவே, இதே நோக்கத்தில் அமெரிக்காவின் புதிய அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று கூறினார்./