நேற்று காங்கிரஸ், இன்று ஆம் ஆத்மி. நாடாளுமன்றம் முற்றுகை

நேற்று காங்கிரஸ், இன்று ஆம் ஆத்மி. நாடாளுமன்றம் முற்றுகை
aamadmi
உத்தரகாண்ட் மாநில அரசை கலைத்த விவகாரம் காரணமாக நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உள்பட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அதே நாளுமன்றத்தை ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழல் புகாரில் தொடர்புடைய காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற ஆம் ஆத்மி தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாக டெல்லியில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதி, பிரதமர் உள்பட விஐபி பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 உயர் ரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய, இத்தாலி நாட்டை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதற்காக அந்நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பெயரும் அடிபடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.

இந்நிலையில், ஹெலிகாப்டர் பேர ஊழல் புகாரில் தொடர்புடைய காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி  ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply