ரயில்வே துறையில் ரூ.42,000 கோடி அந்நிய முதலீடு

ரயில்வே துறையில் ரூ.42,000 கோடி அந்நிய முதலீடு

chennai metro trainரயில்வே துறையில் ரூ. 42 ஆயிரம் கோடி அந்நிய நேரடி முதலீடு வந் துள்ளது. இதையடுத்து இந்தியா விலேயே ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன.

ஐரோப்பா மற்றும் அமெரிக் காவைச் சேர்ந்த நிறுவனங்கள் ரயில் வேயில் முதலீடு செய்ய உள் ளன. இவைகளுக்கு வழங்கப் பட்ட ஒப்பந்த மதிப்பு ரூ. 42 ஆயிரம் கோடியாகும். இது மிக அதிகமான அந்நிய நேரடி முதலீட்டு ஒப்பந் தம் என்று மத்திய ரயில்வே அமைச் சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

இந்தியாவுக்கு ஸ்திரமான முதலீடு தேவை. அதை பூர்த்தி செய்யும் வழிமுறைகளில் ஒன்று நேரடி அந்நிய முதலீடாகும். சரக்குப் போக்குவரத்துக்கென தனி ரயில் பாதையை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது செயல் படுத்தப்படும்போது இதி லும் நேரடி அந்நிய முதலீடு வருவ தற்கான வாய்ப்புள்ளது என்றார்.

யெஸ் வங்கி ஏற்பாடு செய்திருந்த தலைமை நிதி அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றிய சுரேஷ் பிரபு, முதலீடுகளை ஈர்ப்பதில் ரயில்வேத்துறை அதிக அக்கறை செலுத்துகிறது என்றும் கூறினார்.

Leave a Reply