ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் வெற்றி.
ற்றைய முதல் ஆட்டத்தைல் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் ஐதராபாத் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி அதிரடி ஆட்டம் மூலம் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் எடுத்தது. தவான் 82 ரன்களும், வார்னர் 48 ரன்களும் எடுத்தனர்.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை அணி 16.3 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டழந்து 85 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 3 விக்கெட்டுக்களை எடுத்த நெஹ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. சாஹிப் அல் ஹசான் 66 ரன்களும், யூசுப் பதான் 63 ரன்களும் எடுத்தனர்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய குஜராத் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.. 3 விக்கெட்டுக்களை எடுத்த நெஹ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.