நெல்லையில் ‘விஜய் 60’ படப்பிடிப்பு?
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். விஜய்யின் அறிமுக பாடலின் படப்பிடிப்பு இதுவரை நடைபெற்று வந்த தற்போது இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இதனையடுத்து வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த படத்தின் கதைப்பின்னணி நெல்லையில் நடைபெறுவது போன்று இருப்பதாகவும், இதனால் பின்னி மில்லில் நெல்லை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இருப்பினும் ஒருசில காட்சிகளை நெல்லையில் படமாக்க இயக்குனர் பரதன் முடிவு செய்திருப்பதால் விரைவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் நெல்லை செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.