பிரதமர் மோடியின் பி.ஏ., எம்.ஏ பட்டத்தை காட்டிய அமித் ஷா

பிரதமர் மோடியின் பி.ஏ., எம்.ஏ பட்டத்தை காட்டிய அமித் ஷா
modi
பாரத பிரதமர் நரேந்திர மோடி பி.ஏ பட்டம் பெற்றது குறித்து டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதுகுறித்த தகவல்களை அவருக்கு அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கும், குஜராத் பல்கலைக்கழகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் ஆணையிட்டது.

இதுகுறித்த சர்ச்சை ஒன்றில் பிரபல ஆங்கிலப் பத்திரிகை குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முதல் வகுப்பில் மோடி தேர்ச்சி பெற்றிருந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் குஜராத் பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி மோடி சிறந்த மாணவர், அரசியல் அறிவியலில் 1983-ம் ஆண்டு 62.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று ஆமதாபாத் மிரர் என்ற அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

ஐரோப்பிய அரசியல், இந்திய அரசியல் பகுப்பாய்வு மற்றும் அரசியல் உளவியல் அடங்கிய பாடங்கள் அடங்கிய 2 வருட பட்டப்படிப்பை முடித்துள்ள பிரதமர் மோடி எம்.ஏ. முதலாம் ஆண்டில் 400 மதிப்பெண்களுக்கு 237 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இரண்டாவது ஆண்டு 400 மதிப்பெண்களுக்கு 262 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். மொத்தமாக 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார், என்று குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக அந்தப் பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, எம்.ஏ பட்டம் பெற்ற மோடி பி.ஏ. படித்ததற்கான ஆதாரம் எங்கே? என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக கட்சியின் தேசிய தலைவர் அம்த் ஷா,  பிரதமர் மோடிக்கு டெல்லி பல்கலைக்கழகம் அளித்த பி.ஏ. பட்டம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகம் அளித்த எம்.ஏ. பட்டம் ஆகியவற்றின் ஆதாரங்களை காட்டினார். இதுபோன்ற தகவல்களை அளிப்பதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் சூழ்நிலை உருவாகி விட்டதற்காக வருத்தப்படுவதாக கூறிய அமித் ஷா, பிரதமரின் கல்லூரி பட்டம் குறித்து பச்சைப்பொய்யை பரப்பி, நாட்டு மக்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் குழப்பத்தை விளைவித்து விட்டார் என்று குற்றம்சாட்டினார்.

modi1

Leave a Reply