ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்: ஒரே ஒரு ரன் வித்தியாசத்டில் பெங்களூர் வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியை பெங்களூர் அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி டிவில்லியர்ஸ் அதிரடியால 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் குவித்தது. கேப்டன் கோஹ்லி 20 ரன்களும், டிவில்லியர்ஸ் 64 ரன்களும், ராஹூல் 42 ரன்களும் எடுத்தனர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. முரளிவிஜய் 89 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று புனே மற்றும் ஐதராபாத் அணீகள் மோதுகின்றன.