உத்தரகாண்ட் வாக்கெடுப்பு முடிந்தது. முடிவு என்ன? சஸ்பென்ஸ் நீடிக்கின்றது.

உத்தரகாண்ட் வாக்கெடுப்பு முடிந்தது. முடிவு என்ன? சஸ்பென்ஸ் நீடிக்கின்றது.
uttarghand1
உத்தரகாண்ட் சட்டசபையை கலைத்தது சட்டவிரோதம் என முதல்வர் ஹரீஷ் ராவத் தொடர்ந்த வழக்கு காரணமாக சுப்ரீம் கோர்ட் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது.

இதன்படி இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் தகவல்கள் மூடி சீலிடப்பட்ட ஒரு கவரில் சுப்ரீம்கோர்ட்டில் ஒப்படைக்கப்படவுள்ளது. நாளை சுப்ரீம் கோர்ட் இந்த வாக்கெடுப்பின் முடிவை அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த வாக்கெடுப்பில் ஹரீஷ் ராவத் வெற்றி பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 34 உறுப்பினர்களின் ஆதரவுவும், பாரதிய ஜனதாவுக்கு 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் கூறப்படுகிறது. குறிப்பாக பிடிஎஃப் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்களும் ஹரீஷ் ராவத்தை தாங்கள் ஆதரித்ததால் ஹரீஷ் ராவத் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறாது.

Leave a Reply