நாங்குனேரி பாமக வேட்பாளர் திடீரென அதிமுகவில் இணைந்தார்.

நாங்குனேரி பாமக வேட்பாளர் திடீரென அதிமுகவில் இணைந்தார்.
ramdoss
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக உள்ளனர். இந்த தேர்தலில் பாமக எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி மற்றும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி பா.ம.க. கட்சி வேட்பாளராக போட்டியிடும் திருப்பதி ரெட்டியார் இன்று திடீரென அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

அப்போது அவர், தமிழகத்தில் நிலையான ஆட்சியை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசால் தான் தர முடியும் என்பதால் அக்கட்சியில் இணைந்ததாக திருப்பதி ரெட்டியார் கூறினார். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நாங்குநேரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்த சம்பவம் பா.ம.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply