தமிழக சட்டமன்ற தேர்தல்: சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்?
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று தமிழகம் முழுவதும் 73.76 சதவீதம் வாக்குப்பதிவு ஆனபோதிலும் தலைநகரான சென்னையில்தான் மிகக்குறைந்த அளவு வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
இரண்டாவது சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கிடைத்ததால் சென்னையில் வாக்குகள் உள்ள பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு மற்றும் சுற்றுலா ஸ்தலங்களுக்கு சென்றுவிட்டதுதான் வாக்குப்பதிவு குறைந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் வாக்குப்பதிவு நேரத்தில் மழை பெய்ததால் வசதி படைத்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் படித்தவர்கள் ஃபேஸ்புக்,டுவிட்டரில் தேர்தல் குறித்து ஆர்வமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் அளவிற்கு ஓட்டு போடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.