ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: பெங்களூர் அணி அபார வெற்றி:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை பெங்களூர் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. காம்பிர் 51 ரன்களும், பாண்டே 50 ரன்களும் எடுத்தனர்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூர் அனீ கெய்லே, விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ் ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 18.4 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கெய்லே 49 ரன்களும், விராத் 75 ரன்களும், டிவில்லியர்ஸ் 59 ரன்களும் எடுத்தனர். விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.