உலகின் 3வது ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. அமெரிக்க டாக்டர்கள் சாதனை

உலகின் 3வது ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. அமெரிக்க டாக்டர்கள் சாதனை
surgery
உலகில் இதுவரை இரண்டே இரண்டு ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்தான் நடந்துள்ளது. ஒன்று கடந்த 2006-ம் ஆண்டு சீனாவில் நடந்த ஆபரேசன். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவதாக 2014-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்ததோடு ஆபரேசன் செய்யப்பட்ட நபர் ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் மசா சூசெட் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரை சேர்ந்தவர் தாமஸ் மேன்னிங் என்ற 64வயது நபருக்கு சமீபத்தில் வெற்றிகரமாக ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. ரூ.50 லட்சம் செலவில் சுமார் 11மணி நேரம் நடைபெற்ற இந்த ஆபரேஷனுக்கு பின்னர் அவர் எளிதாக சிறுநீர் கழித்து வருவதாகவும், இன்னும் ஒருசில மாதங்களில் அவர் செக்ஸ் வாழ்க்கையிலும் ஈடுபடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்று நோய் காரணமாக இவரது ஆண் உறுப்பு அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply