நாளைய வாக்கு எண்ணிக்கைக்கு தடை வருமா? சென்னை ஐகோர்ட் இன்று விசாரணை
தமிழகத்தில் உள்ள 232 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என அவசர வழக்கு ஒன்று டிராபி ராமசாமி மற்றும் சட்ட பஞ்சாயத்துக்கு இயக்கம் சார்பில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டு இன்று பிற்பகலில் விசாரணை செய்யவுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா விநியோகிக்கப்பட்டதால் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் இந்த இரண்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால் அதன் முடிவுகள் இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிகிறது.