வருமான சுய அறிவிப்பு திட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

வருமான சுய அறிவிப்பு திட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Income-Tax-Raidமத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி இதுவரை வருமான வரி செலுத்தாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வருமான சுய அறிவிப்புத் திட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தக வலை மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் ஆணையர் மீனாட்சி ஜே கோஸ்வாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர் கள் தங்களது சொத்து விவரத்தை தெரிவிக்கலாம். அந்த விவரத்தை அளித்து அதற்கு 45 சதவீத வரியை செலுத்த வேண்டும். அவ்விதம் செலுத்தினால் அவர் கள் மீது எவ்வித வழக்கும் தொடரப்படாது.

வருமானம் மற்றும் சொத்து விவரத்தை முழுமையாக தாக்கல் செய்வதற்கான காலம் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. நான்கு மாதங்கள் அதாவது 120 நாள்கள் மட்டுமே இது அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் வருமான விவரத்தைத் தாக்கல் செய்து நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம்.

உள்நாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப் பவர்களது சொத்துகளை வெளிக் கொண்டு வரவும், தாமாக முன் வந்து சுய வருமானத்தை தாக்கல் செய்வதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களது சந்தேகங் களை இம்மாதம் 25-ம் தேதி வரை நிதி அமைச்சகத்திடம் கேட்கலாம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply