ஈரான் உடனான தூதரக உறவு துண்டிப்பு. மாலத்தீவு அதிரடி அறிவிப்பு

ஈரான் உடனான தூதரக உறவு துண்டிப்பு. மாலத்தீவு அதிரடி அறிவிப்பு

medium_91784மாலத்தீவு மற்றும் ஈரான் நாடுகள் இடையே கடந்த சில மாதங்களாகவே உறவு நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஈரான் உடனான தூதரக உறவை முற்றிலும் துண்டித்துக் கொள்வதாக மாலத் தீவு அறிவித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே கருத்துவேறுபாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தூதரக முறிவிற்கு மாலத்தீவு கூறும் காரணங்கள் இதுதான்: வளைகுடா பகுதியின் அமைதியையும், பாதுகாப்பையும் குலைக்கும் வகையிலான கொள்கைகளைக் கொண்டு ஈரான் செயல்படுவதால் அந்த நாட்டுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஆனால் மாலத்தீவுக்கு அதிக அளவில் நிதியுதவி அளித்து வரும் சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

Leave a Reply