மக்களுக்கு நன்றி சொல்ல அகராதியில் போதுமான வார்த்தைகள் இல்லை. முதல்வர் ஜெயலலிதா பேட்டி

மக்களுக்கு நன்றி சொல்ல தமிழில் வார்த்தைஇ இல்லை. முதல்வர் ஜெயலலிதா பேட்டி
jayalalitha
தமிழக தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் மீண்டும் முதல்வராகவுள்ள ஜெயலலிதா சற்று முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவருக்கும் வணக்கம். நடந்து முடிந்த தேர்தல் முடிவு இன்னும் முழுமையாக பெறப்படவில்லை. இருப்பினும் அதிமுகவிற்கு தமிழக மக்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எனது நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து வெளிப்படும் நன்றியை வெளிப்படுத்த தமிழில் வார்த்தைகள் இல்லை. 1984ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் ஆளுகின்ற கட்சி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொடர்வது என்பது இப்பொழுதுதான் நடந்துள்ளது.

10 கட்சிகள் சேர்ந்து என்னை எதிர்த்த போதிலும், பெரிய கூட்டணி என்று என்று இல்லாமல் நான் ஆண்டவனை மட்டுமே பெரிதும் நம்பினேன். ஆண்டவனும் என்னை கைவிடவில்லை. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நானும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற எனது தாரக மந்திரத்தின் அடிப்படையில் செயல்பட்டேன். இனியும் செயல்படுவேன்.

மக்களுக்கு நன்றி சொல்ல அகராதியில் போதுமான வார்த்தைகள் இல்லை. எனது நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் நான் புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபடுவேன். தமிழக மக்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்

Leave a Reply