நானே களத்தில் இறங்குவேன். தேர்தலுக்கு பின் கருணாநிதியின் முதல் எச்சரிக்கை
திமுக இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தேவையான தொகுதிகளை பிடிக்காவிட்டாலும் சட்டசபையில் கெளரவமான தொகுதிகளை பெற்று வலுவான எதிர்க்கட்சியாக விளங்கியுள்ளது. திமுகவின் ஆதரவு இல்லாமல் எந்த புதிய சட்டமும் நிறைவேற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு அறிவித்த தேதியில் தேர்தல் நடத்தாவிடில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தி.மு.க தலைவர் கருணாநிதி தேர்தலுக்கு பின் முதல்முறையாக எச்சரித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறுகையில், ” தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலை ஒத்தி வைத்தது கண்டனத்திற்குரியது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கின்றன. தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு அறிவித்த தேதியில் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தாவிடில் போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று கூறினார்.