திட்டமிட்டபடி மருத்துவ நுழைவுத்தேர்வு நடக்கும். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

திட்டமிட்டபடி மருத்துவ நுழைவுத்தேர்வு நடக்கும். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

naddab_2862712fஇந்த ஆண்டு தேசிய அளவு மருத்துவ நுழைவுத்தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டத்தை தொடர்ந்து மே 1ஆம் தேதி முதல்கட்ட நுழைவுத்தேர்வு நடந்தது. இந்நிலையில் வரும் ஜூலை 24ஆம் தேதி இரண்டாவது கட்ட நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவையின் அவசர கூட்டம் கூடியதாகவும், இந்த ஆண்டு மட்டும் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து குறித்த திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. அவசர சட்டம் இயற்றப்படவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் உண்மையானது அல்ல’ என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் திட்டமிட்டபடி இரண்டாவது கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply