ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கருணாநிதி, ஸ்டாலின் கலந்து கொள்வார்களா?

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கருணாநிதி, ஸ்டாலின் கலந்து கொள்வார்களா?

Karunanidhiநடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளது. ஜெயலலிதா முதல்வராகவும் அவரை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இதற்கான முழு ஏற்பாடுகள் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த பதவியேற்புவிழாவில் தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. குறிப்பாக திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற
திமுக தலைவர் கருணாநிதி, கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் ஆகியோர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், இடதுசாரி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஈரான் நாட்டிற்கு செல்லவுள்ளதால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் தனியாக அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதால் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply