கிரண்பேடிக்கு கவர்னர் பதவி வழங்க ஜனதாதளம் எதிர்ப்பு

கிரண்பேடிக்கு கவர்னர் பதவி வழங்க ஜனதாதளம் எதிர்ப்பு

kiran bediஇந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடியை நேற்று புதுவை மாநில துணைநிலை ஆளுனராக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நியமனம் செய்து உத்தரவிட்டார். இந்த நியமனத்திற்கு தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியிருப்பதாவது:–

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அரசியல் தலைவர்களை மாநிலங்களுக்கு கவர்னராக நியமித்து வந்தனர். இதற்கு நாங்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். இதே எதிர்ப்பை பாரதீய ஜனதாவும் தெரிவித்தது.

ஆனால் இன்று கிரண் பேடியை புதுவை மாநில கவர்னராக நியமித்து உள்ளனர். டெல்லியில் கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா முதல்–மந்திரி வேட்பாளராக நிறுத்தினார்கள். அப்படிப்பட்டவரை இப்போது ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் இது நிச்சயமாக அரசியல் ரீதியான நியமனமே ஆகும்.

தங்களுடைய அதிகாரத்தை பாரதீய ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் சட்ட ரீதியான பதவிகளை இப்படி தவறாக பயன்படுத்துவது சரியானது அல்ல.

இவ்வாறு கே.சி.தியாகி கூறியுள்ளார்.

Leave a Reply