ஆங் சாங் சூகியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

ஆங் சாங் சூகியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

aung sang syiமியான்மர் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆங்சான் சூகி கட்சி வெற்றி பெற்று அவர்  வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக அந்நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங்சான் சூகியை அவர் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை செய்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஜனநாயக முறையை மீண்டும் பின்பற்றத் தொடங்கியுள்ள மியான்மர், உலக நாடுகளுக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று கெர்ரி கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியின் இந்த பயணம் இருநாடுகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இனி இரு நாடுகளும் இணைந்து பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக பாடும்படும் என்றும் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

Leave a Reply