பிரேசியர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்
1. ”அடர் நிறங்கள் தவிர்த்து, சூரியக் கதிர்களை ஈர்க்காத வெளிர் நிறங்களிலேயே பிரேசியர் வாங்கவும்.
2. இளம் பெண்களுக்கு மார்பகங்கள் வளர்ச்சி நிலையில் இருக்கும் என்பதால், அவ்வப்போது சைஸ் செக் செய்து வாங்கவும்.
3. பிரேசியர் வாங்கிய புதிதில், முதல் ஹுக்கில் மாட்டிப் பயன்படுத்தவும். நாளடையில் எலாஸ்டிக் தளர்ந்து லூஸாகும்போது, கடைசி ஹூக்கை பயன்படுத்திக்கொள்ளலாம்.
4. பிரேசியர் ஸ்டிராப் தோள்களில் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தாலோ அல்லது முதுகுப் பகுதியில் மாட்டும் ஹூக் மேலே ஏறிக்கொண்டே வந்தாலோ, அது தவறான சைஸ் என்பதைப் புரிந்துகொள்ளவும்.
5. விளம்பரங்களில் காட்டப்படும் ஃபேன்ஸி பிரேசியர்களைவிட, ஸ்போர்ட்ஸ் பிரா, சுடிதார் பிரா என்று உங்கள் தேவையைப் பொருத்துத் தேர்ந்தெடுக்கவும்.
6. எடை அதிகரித்து, குறைந்து என சைஸில் குழப்பம் உள்ளவர்கள், சைஸ் பார்த்து வாங்குவதைவிட, ட்ரையல் பார்த்து வாங்கவும்.
7. அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வசதியுள்ள ஸ்டிராப்கொண்ட பிரேசியர், வசதியாக இருக்கும்.
8. மிகவும் இறுக்கமாக பிரேசியர் அணிந்தால் காற்றோட்டம் தடைபட்டு வியர்வை, துர்நாற்றம் என்று பிரச்னைகள் ஏற்படும்.
9. உறங்கும்போது இறுக்கமாக பிரேசியர் அணிவதைத் தவிர்க்கவும்.
10. ஒரு பிரேசியரை அதிகபட்சம் எட்டு மாதங்கள் பயன்படுத்தலாம்.”