முதல்கட்ட ஸ்மார்ட் சிட்டி போட்டியில் வென்ற 13 நகரங்கள் எவை எவை?
இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டி அமைக்க பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் திட்டமிட்டு அதற்கான நகரங்களும் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் முதல்கட்டமாக 13 ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் சென்னை, கோவை உள்பட பல நகரங்கள் போட்டியிட்ட நிலையில் தற்போது இந்த 13 நகரங்களின் லிஸ்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு 13 ஸ்மார்ட்சிட்டியின் நகரங்களை சற்று முன் அறிவித்தார். அந்த நகரங்கள் பின்வருமாறு:
1. லக்னோ 2. வாரங்கால், 3. தர்மசாலா 4. சண்டிகார் 5. ராஜ்பூர் 6. நியூ டவுன் கொல்கத்தா 7. பகல்பூர் 8. பனாஜி 9. போர்ட்பிளேயர் 10. இம்பால் 11. ராஞ்சி 12. அகர்தலா 13. ஃபரிதாபாத்
ஸ்மார்ட்சிட்டி போட்டியில் தமிழகத்தின் எந்த நகரமும் தேர்வு செய்யப்படவில்லை என்பது தமிழக மக்களுக்கு பெரும் மனவருத்தத்தை தந்துள்ளது.