ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: த்ரில் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது பெங்களூர்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து நேற்று முதல் பிளே ஆப் சுற்று ஆரம்பமாகியது. முதல் பிளே ஆப் போட்டியில் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி த்ரில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்ததால் குஜராத் முதலில் களமிறங்கியது. இந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 9 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்கள் வீழ்ந்து தத்தளித்த நேரத்தில் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் அடித்த 73 ரன்கள் காரணமாக குஜராத் அணி 20 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, கேப்டன் விராத் கோஹ்லி உள்பட 5 விக்கெட்டுக்கள் வெறும் 29 ரன்களுக்கு வீழ்ந்தது. இதனால் வெற்றியை நோக்கி செல்ல முடியாமல் தத்தளித்த அணியை டிவில்லியர்ஸ் தனது அதிரடி மூலம் மீட்டார். 47 பந்துகளில் 79 ரன்கள் குவித்த அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் வெற்றிக்கு தேவையான 159 ரன்களை குஜராத் அணி எடுக்க உதவினார். குஜராத் அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுப்போட்டியில் மோதவுள்ளன.