இந்திய உணவுக் கழகத்தில் காவலர் பணி
இந்திய உணவுக்கு கழகத்தில் நிரப்பப்பட உள்ள காவலர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: watchman Category-IV
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.8,100 – 18,070
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நகரங்கள்: மும்பை, ராஜ்பூர், அகமதாபாத், போபால்
விண்ணப்பிக்கும் முறை: fcijobsportal.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.06.2016